புதிய நாடாளுமன்ற கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2023, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

புதுதில்லியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு இன்று (03.12.2023) வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த தேசிய விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும் என்றார். தனிப்பட்ட மற்றும் நிறுவன பணிகளை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்படுவது அனைவரையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளிகள், பிற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் எனவும் அவர்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமானது என்று குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், மாற்றுத் திறனாளிகள் மீதான சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

சரியான வசதிகள், வாய்ப்புகள் மற்றும் அதிகாரமளித்தலுக்கான முயற்சிகளின் காரணமாக, இனி வரும் காலங்களில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வார்கள் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதிலிருந்து அனைவரும் பாடம் கற்று, தொடக்கத்திலிருந்தே மாற்றுத் திறனாளிகளின்  தேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, நல்ல கல்வி, பாலின சமத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது மாற்றுத் திறனாளிகளின் அதிகாரமளித்தலுக்கு சிறப்பு வலிமையை அளிக்கிறது என்று கூறினார். இந்த இலக்குகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து, அவற்றை அடைவதை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்திறனை சுட்டிக்காட்டியவர், நமது வீரர்கள் தங்கள் அசைக்க முடியாத வெற்றி மனப்பான்மையால் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர் என்றார். அனைத்து வீரர்களின் செயல்திறனிலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Next Post

சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies