நடிகர் யாஷின் அடுத்த படம் என்ன?
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் யாஷின் அடுத்த படம் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் யாஷின் அடுத்த படத்தின் டைட்டிலுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கே.ஜி.எப்  திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் அறிமுகமானவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான யாஷ். இவர் நடிப்பில் கடைசியாக கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் வெளியானது. அந்த படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனிடையே ரன்பிர் கபூர் – ஆலியா பட் நடிப்பில் இந்தியில் தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. 3 பாகங்களாக தயாராகும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் யாஷ் நடிக்கும் புதிய படத்தில் பெண் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. யாஷ்-ன் 19 வது படமாக தயாராகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளார்.

இவர் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நளதமயந்தி, பொய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் இந்தியில் ஒருசில படங்களை இயக்கி உள்ளார்.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சரண்ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று படத்தின் டைட்டிலுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘டாக்ஸிக்’ (TOXIC) என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் யாஷ் இரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags: CinemaYashKGFnew movietoxic
Share
Tweet
SendShare
Previous Post

நான் 3-வது முறையாக பிரதமராகும்போது… பிரதமர் மோடி உறுதி!

Next Post

சாமானிய மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி! -இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies