டி20: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் தொடர் டர்பன் நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான, முதலாவது டி20 போட்டி தென்னாப்பிரிக்க நாட்டின் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில், சீனியர் வீரர்களான விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால் 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விலகி விட்டார்.

இதனால், கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு, கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் நகரில் உள்ள மைதானம், இந்திய அணிக்கு சவாலாக இருந்தாலும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென்னாப்பிரிக்க அணி முயற்சி செய்யும். எனவே, இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த இரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை, 24 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன. இதில், 13 போட்டிகளில் இந்திய அணியும், 10 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் (உத்தேச பட்டியல்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.

மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் (உத்தேச பட்டியல்), ரீஜா ஹென்ரிக்ஸ், மேத்யூ பிரீட்கே, ஹென்ரிச் கிளாசென் அல்லது டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், டோனோவான் பெரீரா, மார்கோ யான்சென் அல்லது பெலுக்வாயோ, கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜி, நன்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.

Tags: t20 crickett 20india vs southafrica
Share
Tweet
SendShare
Previous Post

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

Next Post

பணம் எண்ணும் பணியில் 50பேர், 40 மெஷின்கள்: எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளர் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies