இன்றைய தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை முன்வைக்கிறது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்றும் மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம், உச்ச நீதிமன்றம் 2019 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தின் முடிவை உறுதி செய்துள்ளது.
Through today’s historic verdict, the Supreme Court has upheld the decision of the Parliament on 5 August 2019.
In this time, Jammu and Kashmir and Ladakh have seen the development, good governance and empowerment that were long their due. This has strengthened India’s unity…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 11, 2023
இந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை நீண்டகாலமாக இருக்க வேண்டிய வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் கண்டுள்ளன. இது இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.
இன்றைய தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை முன்வைக்கிறது. அவர்களுக்கு மேலும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கொண்டு வர மோடி அரசு தனது இடைவிடாத முயற்சிகளை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.