தமிழக – கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது.
கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் டிசம்பர் 12-ம் தேதி அன்று இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கேரளாவின் முதலமைச்சர் பிணராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால், காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை குமுளி முதல் குட்டிக்கானம் வரை தேசிய நெடுஞ்சாலையில போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படும் எனக் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. அதேபோல், சபரிமலையில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் வாகனங்களும் குட்டிக்கானத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக அனுப்பப்படும் என்று கேரளா காவல்துறை அறிவித்துள்ளது.