மதுரை மேலூர் அடுத்துள்ளது சாலைக்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 24).
இவருக்கும், திருச்சி சுண்ணாம்புரக்காரன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், கார்த்திகேயன் தனது பணி நிமித்தம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார்.
இதனால், ஷர்மிளா வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனியாக இருந்தால் சரியாக வராது என ஷர்மிளா தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அங்கு வழக்கம் போல் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அம்மாவுடன் தூங்கச் சென்றுள்ளார். நடுஇரவில் ஷர்மிளாவின் அம்மா, பாத்ரூம் செல்ல எழுந்துள்ளார். அப்போது, ஷர்மிளா கட்டலில் இருந்து கீழே விழுந்து கிடந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, சிகிச்சைக்காக மேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்துள்ளனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஷர்மிளா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 10 -ம் தேதி ஷர்மிளாவுக்கு பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளிலேயே ஷர்மிளா இறந்துபோனது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.