நாடாளுமன்ற அத்துமீறல்: முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்த லலித் ஜா!
Jul 29, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்த லலித் ஜா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த லலித் மோகன் ஜா, முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்து விட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சாகர் சர்மா, மனோ ரஞ்சன் ஆகிய 2 இளைஞர்களும் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகைக் குண்டுகளை வீசினர். பலத்த நான்கு அடுக்கு பாதுகாப்பை மீறி இவர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் குற்றவாளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய பிரத்தியேக ஷூவை லக்னோ சென்று தயாரித்து வாங்கி வந்திருக்கிறார்.

இது தவிர, குற்றவாளிகள் குருக்கிராமில் தங்கி இருக்கவும், புகைக் குண்டு குப்பிகள் வாங்கவும் இவர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். அதேபோல, நாடாளுமன்றத் தாக்குதல் நடந்தபோது இவரும் அங்குதான் இருந்திருக்கிறார். நீலம் தேவியும், அமோல் ஷிண்டேவும் நாடாளுமன்ற வளாகத்தில் புகைக் குண்டுகளை வீசியபோது, அதை லலித் மோகன் ஜா தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கைதான குற்றவாளிகள் 4 பேரின் செல்போன்களும் லலித் மோகன் ஜாவிடம் இருப்பது தெரியவந்தது. எனவே, அவரைக் கைது செய்தால்தான் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, அவரைப் பிடிக்க டெல்லி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில்தான், நேற்று இரவு லலித் மோகன் ஜா டெல்லி போலீஸாரிடம் சரணடைந்தார். பாத் ஆப் டியூட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த அவரை, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு பிரிவினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, லலித் மோகன் ஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் நடந்து முடிந்ததும் லலித் மோகன் ஜா பஸ்சில் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றிருக்கிறார். அங்கு நகுர் என்கிற பகுதியில் தனது 2 நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

ஆனால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போலீஸார் தன்னை நெருங்குவதை உணர்ந்ததாகத் தெரிகிறது. எனவே, அவர் டெல்லிக்கு திரும்பி வந்து சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, லலித் மோகன் ஜாவுக்கு உதவி செய்த 2 நண்பர்கள் பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில், அவர்கள் மகேஷ், ராகேஷ் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொல்கத்தாவில் லலித்துக்கு நெருக்கமானவர்கள் யார்? யார்? என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் மோகன் ஜா, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. பகத்சிங் போன்று நாட்டுக்காக புரட்சி செய்ய வேண்டும் என்று முகநூலில் பதிவுகளையும் வெளியிட்டு ஆதரவு பெற்றதாகவும் தெரியவந்திருக்கிறது.

மேலும், லலித் மோகன் ஜா என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றில் பொதுச்செயலாளராக இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைவருக்கு அவர் நாடாளுமன்ற தாக்குதல் முடிந்ததும் தகவல்கள் அனுப்பி இருக்கிறார். அதில், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஆகவே, நாடாளுமன்றத் தாக்குதல் சதித் திட்டத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், லலித் மோகன் ஜா ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றபோது மற்றவர்களின் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

அந்த ஆவணங்களை அவர் தீவைத்து எரித்திருக்கலாம் என்று விசாரணைக் குழுவினருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரின் செல்போன்களை அவர் தீவைத்து முழுமையாக எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றவாளிகளிடம் வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags: evidenceParliament attackLalit Mohan Ja
ShareTweetSendShare
Previous Post

நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies