தனித்தீவானது திருச்செந்தூர் : அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம் !
Aug 7, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனித்தீவானது திருச்செந்தூர் : அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம் !

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 02:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொட்டி தீர்த்து வரும் மழையால் திருச்செந்தூர் தனித்தீவானது. ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழைக்கான ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விட்டு விட்டு பெய்யும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால்  மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.  மின்சாரம்,தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்செந்தூர் சிவன் கோவிலில் குளம் போல் நீர் தேங்கியுள்ளது.

மழை நீரில் பேச்சியம்மன் சிலை மூழ்கும் நிலையில் உள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே ஸ்ரீவைகுண்டம் அடுத்த தாதன்குளம் அருகே கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பால் தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் இருந்த நூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர்

Tags: raintamilnadu raintiruchedurtrain track
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கர் சபாநாயகர் பதவி: ராமன் சிங் வேட்புமனு!

Next Post

வாரணாசியில் ரூ.20,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அர்ப்பணிப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies