ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!
Sep 13, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல இமிடேட் செய்து மிமிக்ரி செய்தது கடும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் தன்கரை போலவே மிமிக்ரி செய்ததோசு, 1,000 முறைகூட மிமிக்ரி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, பார்வையாளர்கள் மாடத்திலிருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளில் இருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, அவை நடவடிக்கையின்போது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் நடந்துகொள்வதைப் போல இமிடேட் செய்தும், மிமிக்ரி செய்தும் கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஆளும் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும், இது ஒரு கலை என்றும் கல்யாண் பானர்ஜி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சற்றே அடங்கி இருந்த நிலையில், திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மீண்டும் ஜெக்தீப் தன்கரை போல மிமிக்ரி செய்திருக்கிறார்.

மேலும், “நான் மிமிக்ரி செய்து கொண்டேதான் இருப்பேன். இது ஒரு கலை. தேவைப்பட்டால் 1,000 முறைகூட செய்வேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளன. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, “கல்யாண் பானர்ஜி குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அவரது உரிமை என்று கூறுகிறார். அதோடு, தனது தாயிடம் சிறு குழந்தை போல் ஜெக்தீப் தன்கர் குறை கூறக்கூடாது என்றும் கூறுகிறார். இண்டி கூட்டணியினரும், ராகுல் காந்தியும் கல்யாண் பானர்ஜியை தைரியப்படுத்துகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: TMC MPJagdeep DhankarKalyan BanerjeeImitate
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் செய்த அநியாயம்!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்கள் இடத்தை பிடிப்போம்! – ஹாக்கி வீராங்கனை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies