கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51% அதிகரிப்பு: அமித்ஷா!
Jul 29, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51% அதிகரிப்பு: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 51% அதிகரித்திருப்பதாகவும், இது உலகின் அதிவேக வளர்ச்சியாகும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, ஆனந்த் மாவட்டத்தில் அமையவிருக்கும் இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு (என்.சி.டி.எஃப்.ஐ.) அலுவலக கட்டடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இன்று 24 சதவீத பங்களிப்புடன் உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை எட்டி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் பால் உற்பத்தி சுமார் 51 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது உலகில் மிக விரைவான அதிகரிப்பாகும்.

கூட்டுறவு பால் பண்ணைகள் மூலம் பெரும்பாலான உற்பத்திகள் செய்யப்பட்டதால்தான் இது சாத்தியமானது. ஆகவே, அனைத்து கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பால் நிறுவனங்கள் மற்றும் கிராம அளவில் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை உறுதி செய்யும் கூட்டுறவு மாதிரியை கடைபிடிக்க பால்பண்ணைத் தலைவர்கள் முன்வர வேண்டும்.

கூட்டுறவு பால் பண்ணை நடத்த வேண்டும் என்றால், அதை வளர்க்க பல நிறுவனங்கள் உருவாக வேண்டும். அந்த வகையில், இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு இப்பணியைச் செய்யும். ஒரு வகையில், அனைத்து பால் பண்ணைகளுக்கும் வழிகாட்டும் பணியை என்.சி.டி.எஃப்.ஐ. செய்து வருகிறது.

வெண்மைப் புரட்சியானது ஆனந்த் மாவட்டத்தின் ‘வாசி’ என்ற கிராமத்தில் இருந்துதான் தொடங்கியது. தற்போது, அதே ஆனந்த் மாவட்டத்தில் சுமார் 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் என்.சி.டி.எஃப்.ஐ.-ன் தலைமையகம் கட்டப்பட உள்ளது. சுமார் 32 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்.சி.டி.எஃப்.ஐ.,  சூரிய ஒளி மின் நிலையம் மூலம் இயக்கப்படும். மேலும், 100 சதவீதம் பசுமை கட்டடமாக இருக்கும்” என்றார்.

மேலும், தன்னம்பிக்கை இந்தியா என்ற பார்வையை அடைவதில் கூட்டுறவு பால் பண்ணைகளின் பங்களிப்பை பாராட்டிய அமித்ஷா, டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்த 100 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அடைய பால்பண்ணைத் தலைவர்களை வலியுறுத்தினார். அதோடு, இயற்கை விவசாயம் குறித்தும் வலியுறுத்திய அமைச்சர், மாட்டுச் சாணத்தை சேகரிக்க கிராம அளவிலான மையங்களை அமைக்க கூட்டுறவு பால் கூட்டமைப்புகளை கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியின்போது, ​​25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 37 வெற்றியாளர்களுக்கு என்.சி.டி.எஃப்.ஐ. இ-மார்க்கெட் விருதுகளையும் அமித்ஷா வழங்கினார். கர்நாடகாவைச் சேர்ந்த பால் கூட்டமைப்பு நந்தினி, டெல்லியில் உள்ள மதர் டெய்ரி மற்றும் தமிழகத்தின் ஆவின் டெய்ரி ஆகியவை விருதுகளின் முதல் 3 இடங்களைப் பிடித்தன. நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சங்கர் சவுத்ரி, திலீப் சங்கனி உள்ளிட்ட முன்னணி கூட்டுறவுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Lay FoundationGujrathome minister amit shahNational Cooperation Dairy Federation of India
ShareTweetSendShare
Previous Post

71% வரி வசூல் பெற்ற திமுக அரசு செய்த பணிகள் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Next Post

குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது எப்படி? முழு விவரம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies