இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 05:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற்றது.

கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 விக்கெட்கள் இழப்பிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 55 ரன்களை எடுத்திருந்தார். இது தொடர்ந்து இந்தியாவின் பேட்டிங் நடைபெற்றது. இதில் 153 ரன்கள் வரை 4 விக்கெட்களை இழந்திருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி ஆட்டமிழக்காமல் வந்தார்.

பின்னர் 8வது விக்கெட்டில் ஆட்டமிழந்த இவர் மொத்தமாக 17 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை எடுத்து 103 பந்துகளில் 106 ரன்களை எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் மற்ற வீரர்கள் 11 ரன்களை கூட தாண்டாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வந்தனர். இன்றைய நாள் தென் ஆப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார். முகேஷ் குமார் 2 விக்கெட்களை எடுத்தார். முகமது சிராஜ், பிரசித்தி கிருஷ்ணா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 பௌண்டரீஸ் என 28 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 2 பௌண்டரீஸ் அடித்து 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 12 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 17 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், மார்கோ யான்சன் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதனால் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: india won the matchindia vs southafrica
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!

Next Post

ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies