கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!
Jun 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கருக்கு அன்பு பரிசாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வழங்கினார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்ததால் கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக கொடுக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கர் வீரர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் விளாசி இந்தியாவைத் தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மேலும் 2வது போட்டியில் பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்குப் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கிரிக்கெட் வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் 5000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த அவர் தென் ஆப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்குப் போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார்.

முன்னதாக 2வது இன்னிங்சில் எல்கர் அவுட்டாகி செல்லும்போது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டி அவருக்குத் தலைவணங்குமாறு கேட்டுக்கொண்ட விராட் கோலி தற்போது ஜெர்சியை பரிசளித்து தன்னை மனதளவிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதேபோல ஒட்டுமொத்த இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்புப் பரிசாக கேப்டன் ரோகித் சர்மா டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 சிறந்த இந்திய வீரர்கள் டீன் எல்கருக்கு நெஞ்சைத் தொடும் பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் நேற்றையப் போட்டியில் மற்றொரு பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஆம் நேற்றையப் போட்டி முடிந்த உடன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு பரிசளித்தார்.

Tags: virat kohlirohith sharmaindia vs southafrica
ShareTweetSendShare
Previous Post

15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்: மீட்க விரைந்த இந்திய போர்க்கப்பல்!

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies