மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

நவீன காலத்தில் சம்பிரதாயமான வாழ்த்துக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை வாங்க நகரங்களுக்கு செல்வதும் உண்டு.

அதனை வாழ்த்து அட்டை என்று சாதாரணமாக கூறி விட முடியாது. அழகான புகைப்படம், அர்த்தமுள்ள வாக்கியம் என பார்த்து பார்த்து வாங்கிய காலத்தை மறக்க முடியாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நம்மை பிடித்தவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்வது உண்டு. அதில் செதுக்கும் அந்த சில வரிகளுக்காக பல மணிநேரம் யோசிப்பது உண்டு. ஏன் நாள் கணக்கில் சிந்தனை செய்வதும் உண்டு.

நாம் அனுப்பிய வாழ்த்து அட்டை சென்று சேர்ந்து  விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தபால்காரரிடம் சந்தேகங்களை கேட்டு பலர் நச்சரிப்பதும் உண்டு. அவ்வளவாக தொலைபேசி வசதி இல்லாத அந்த காலத்தில் பதில் கடிதம் வந்தால் தான், வாழ்த்து அட்டை சென்று சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த அட்டையில் காதல், சோகம், ஏக்கம்,இன்பம்,பாசம் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

தொலைபேசி வசதி வந்த நிலையில், வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய தொடங்கியது. ஏராளமானோர் தொலைபேசியில் பொங்கல்,  தீபாவளி,புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

அதனைத்தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்புவது  பிரபலமானது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொலைபேசி நிறுவனங்கள் பண்டிகை நேரத்தில் வாழ்த்து அனுப்பினால் அதற்கென தனிக்கட்டணங்களை வசூலிக்க தொடங்கின. நாம் என்ன சளைத்தவர்களா? பண்டிக்கைக்கு முன்னதாகவே வாழ்த்துக்களை அனுப்பி அதில் ஒரு சிறிய சுகம் காண்போம்.

தற்போது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, மெயில் என வாழ்த்துக்களை அனுப்ப ஏராளமான வசதிகள் வந்து விட்டன. அதனால் வாழ்த்து அனுப்புவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பியது தனி சுகம் தான்.

Tags: pongal cardinstanew year wish cardTwitterpongalpongal wish
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Next Post

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies