தீவிரமடையும் போராட்டம் : அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரமடையும் போராட்டம் : அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து  தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஜன. 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

ஆனால் இதனை அரசத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடா்பாக திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுதுது செவ்வாய்க்கிழமை (ஜன. 9)முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கின.

தொழிலாளா்கள் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமப்புறங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்,  இயக்கப்படும் பேருந்துகளின் குறைந்ததுள்ளது. இதற்கிடையே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும்  ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில்  அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல்,  ஈரோடு,காஞ்சிபுரம், செய்யாறு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Tags: Transport Corporation employeesIntensification of protestgovernment transport workersgovt transport corporationLabor Welfare Department
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம் எம்.பி. பதவி: பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

Next Post

கோவையில் பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies