திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.70 கோடி!
Aug 5, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.70 கோடி!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 70 இலட்சத்து 70 ஆயிரத்து 541 ரூபாய் கிடைத்துள்ளது.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், வெள்ளிப் பொருட்கள், தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணுவர்.

அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோவில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.

காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், 2 கோடியே 70 இலட்சத்து 70 ஆயிரத்து 541 ரூபாயும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 417 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்தன.

இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 1,100 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 29 கிலோ 300 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

Tags: tiruchendur temple
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 : கோலி விலகல்!

Next Post

திருச்சி விமான நிலையம்: 1 கிலோ தங்கம் பறிமுதல்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies