நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!
Sep 20, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 11:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாயில் அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இப்பாலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.

எனினும், இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்பாலம், மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது. இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதையொட்டி, இன்று காலை மகாராஷ்டிராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாசிக்கில் பிரம்மாண்ட ரோடு ஷோவையும் நடத்தினார்.

 

#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Nashik, Maharashtra. pic.twitter.com/WnZi6hPT2B

— ANI (@ANI) January 12, 2024

Tags: PM ModiMaharastraMumbai BridgeIngaurates
Share
Tweet
SendShare
Previous Post

என் மண் என் மக்கள் நடைபயணத்தில் வாழ்க்கையின் பல அற்புதப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்! – அண்ணாமலை

Next Post

காரில் வலம் வரும் அயோத்தி ராமர் கோவில்!

Related News

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More

அண்மைச் செய்திகள்

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies