மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் - நாராயணன் திருப்பதி கண்டனம்
Aug 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசின் மருத்துவர்கள் பொது மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாரணயன் திருப்பதி அறிக்கையில், மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். மருத்துவம் தொழில் அல்ல, புனிதமான சேவை என்பதால் தான் அரசு பல்வேறு சலுகைகளை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.

மொஹரம் என்ற பெண் நோயாளி வயிற்று வலியின் பொருட்டு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அப் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக மேல் சட்டை (Coat) அணிவது வழக்கம். இந்த வழக்கம் மருத்துவர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கவும் செய்யும்.

ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மேல் சட்டை அணியாமல், வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக பேசியுள்ளது மருத்துவ சேவையை அவமதிப்பாக உள்ளது.

பொது மக்களின் அறியாமையால் பல மருத்துவமனைகளை, மருத்துவர்களை வசை பாடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும், அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு சகிப்பு தன்மையோடு மருத்துவர்கள் சூழ்நிலையினை கையாள்வது அவர்களின் மேன்மை மற்றும் பண்பு.

ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காக அரசு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், அம்மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல். மருத்துவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களை, குழந்தைகளை கூட அன்போடு, பண்போடு “வாங்க, சொல்லுங்க” என்று அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னை விட வயதில் பெரியவரை “நீ, வா, போ” என்ற அலட்சிய வார்த்தைகள் மருத்துவர் என்கிற மரியாதையை இழக்க செய்யும்.

தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அந்த மருத்துவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டியதே.

மூத்த அரசு மருத்துவர்கள் அந்த இளம் மருத்துவருக்கு அறிவுரை வழங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அவசியத்தை உரைத்து எதிர் வரும் காலங்களில் அவரை மாற்றியமைத்துக் கொள்ள உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: dmk failsnarayan tirupati bjp
Share
Tweet
SendShare
Previous Post

தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Next Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies