ஒரு கோடி பெண்களுக்கு மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் வழங்க பிரதமர் முடிவு! - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கோடி பெண்களுக்கு மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் வழங்க பிரதமர் முடிவு! – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் இயந்திரம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் அருகே அக்ராவரம் என்ற கிராமத்தில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு மத்திய அரசின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் வி.கே. சிங்,

நாட்டில் பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி உள்ளார். வேளாண் பயிர்களுக்கு ட்ரோன் மூலம்  மருந்து தெளிக்கும் இயந்திரம் முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒரு கோடி பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இதற்குக் காரணம் பெண்கள் தங்களுடைய அறிவுத்திறனை பயன்படுத்தி வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க, இயந்திரங்களை நல்ல முறையில் கையாளுவார்கள். எனவேதான் பெண்கள் பெயரில் இந்த ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

நாட்டில் யாரும் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இனிவரும் ஐந்தாண்டு காலத்திற்கும் இந்த உணவு தானியம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். தற்போது நாட்டில் 80 கோடி நபர்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையில் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டக் கூடிய வகையில் ஆண்டுக்கு 3 முறை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதால் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்காக கொண்டு வந்துள்ளார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காத தகுதியான பயனாளிகள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு திட்டப் பலன்களை உடனடியாக பெறலாம்.

ஏழை எளிய மக்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி வீட்டு வசதி திட்டத்தில் வழங்கப்படும் வீடுகளில், தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 லட்சம் வீடுகள் கட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

Tags: Union Minister VK Singh
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 2 மணி நேர சிறப்பு இடைவேளை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies