பிரான் பிரதிஷ்டைக்காக ஜனவரி 22 பொது விடுமுறை: எதிர்த்த மனு தள்ளுபடி!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான் பிரதிஷ்டைக்காக ஜனவரி 22 பொது விடுமுறை: எதிர்த்த மனு தள்ளுபடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அறிவித்து வருகின்றன. சில மாநிலங்கள் அரை நாள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநில அரசு ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சட்டக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், “அரசு வெளிப்படையாக ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு அளிப்பதும், அதைக் கொண்டாடுவதும், இராமர் கோவில் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்று நடத்துவதும் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதல்.

பொது விடுமுறைகளை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை, அதிகாரத்தில் உள்ள கட்சியின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள முடியாது. பொதுவிடுமுறை என்பது தேச பக்தர்களை நினைவுகூர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே அறிவிக்கலாம். இராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விடுமுறை அளிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் காட்டுகிறது” என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: public holidayDismissAyodyaPran PratisthaAgainst plea
Share
Tweet
SendShare
Previous Post

வீர தீர தினக் கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றதை என்றும் மறக்க முடியாது : பிரதமர் மோடி

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies