வீர தீர தினக் கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Sep 13, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீர தீர தினக் கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பராக்ரம தினம் 2024, செங்கோட்டையில் வரலாற்று மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களை ஜனவரி 23 அன்று பிரதமர்  மோடி தொடங்கி வைக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கௌரவிக்கும் விதமாக 2021-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பராக்ரம தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டில், தொடக்க நிகழ்வு கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் ஹாலில் நடந்தது. 2022-ம் ஆண்டில், இந்த தினத்தையொட்டி இந்தியா கேட்டில் நேதாஜியின் ஹாலோ கிராம் சிலை திறக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், இந்த தினத்தையொட்டி அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்கு 21 பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.

பராக்ரம தினம் 2024-ஐ (வீர தீர தினம்) முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வரலாற்று அம்சங்கள் மற்றும் துடிப்பான கலாச்சார வெளிப்பாடுகளை ஒன்றிணைக்கும் பன்முக கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

ஜனவரி 23-ம் தேதி மாலை இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த கொண்டாட்டம் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது.

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம், தேசிய நாடகப் பள்ளி, சாகித்ய அகாடமி மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகம் போன்றவை இணைந்து கலாச்சார அமைச்சகத்தால் இந்த விரிவான கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் எனப்படும் இந்திய தேசிய ராணுவம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாற்றில் செங்கோட்டை முக்கிய பங்கு வகித்தது.

செங்கோட்டையில் உள்ள ஒரு அருங்காட்சியகம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் கௌரவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது 2019-ம் ஆண்டில் நேதாஜியின் பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, தேசிய நாடகப் பள்ளியின் (என்.எஸ்.டி) கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அரிய புகைப்படங்கள், ஓவியம் மற்றும் சிற்பங்களும் இடம்பெறும். வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி நிகழ்வுகளும் இடம்பெறும்.

நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும்.

பராக்ரம தினம் – 2024 நிகழ்ச்சியின் போது, குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த, சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ‘பாரத் பர்வ்’ என்ற நிகழ்ச்சியையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் தொடங்கி வைப்பார்.

ஜனவரி 23 முதல் 31 வரை ஒன்பது நாள் நடைபெறும் இந்த நிகழ்வில், மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள், உள்ளூர் அம்சங்கள் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகள் இந்த பாரத் பர்வ்-வில் இடம்பெறுகின்றன.  26 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதில் பங்கேற்கின்றன. இந்த நிகழ்வு செங்கோட்டைக்கு முன்பு உள்ள ராம் லீலா மைதானம் மற்றும் மாதவ் தாஸ் பூங்காவில் நடைபெறும்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

கட்டுப்பாடுகளை விதிக்க தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோபாலபுரம் குடும்பத்தினரின் சொத்து அல்ல! – அண்ணாமலை

Next Post

பிரான் பிரதிஷ்டைக்காக ஜனவரி 22 பொது விடுமுறை: எதிர்த்த மனு தள்ளுபடி!

Related News

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies