பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விரதங்களை மேற்கொண்டார்!
Sep 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விரதங்களை மேற்கொண்டார்!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீ ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விரதங்களை மேற்கொண்டார். பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று பல்வேறு மொழிகளில் ராமாயண பாராயணங்களைப் பிரதமர் மோடி கேட்டார்!

நாளை நடைபெறும் அயோத்தி தாம் ஸ்ரீ ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவுக்காக  2024 ஜனவரி 12 அன்று நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில், பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதம் மற்றும் வழிபாட்டைத் தொடங்கினார்.
ஸ்ரீராமருடன் பெரிய அளவில் தொடர்புடைய நாசிக் தாம் – பஞ்சவடியில் இருந்து அவர் இந்த வழிபாடுகள் மற்றும் விரதங்களைத் தொடங்கினார்.

1. ஸ்ரீ காலாராம் கோயில், நாசிக்

2024 ஜனவரி 12, அன்று பிரதமர் மகாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள காலா ராம் மந்திரில் பிரார்த்தனை செய்து வழிபட்டார்.

அவர் ஸ்ரீ ராம் குண்த்-தில் வழிபாடு மற்றும் பூஜை செய்தார். ஸ்ரீ ராமர் அயோத்திக்கு வெற்றிகரமாக திரும்பியதை சித்தரிக்கும் ராமாயணப் பகுதி மராத்தி மொழியில் பிரதமருக்கு வாசிக்கப்பட்டது. துறவி ஏக்நாத் ஜி மராத்தியில் எழுதிய பவார்த் ராமாயணத்தின் ஸ்லோகங்களையும் பிரதமர் கேட்டார்.

2.         வீரபத்ரர் கோயில், லேபக்ஷி, ஆந்திரப் பிரதேசம்

2024  ஜனவரி 16  செவ்வாய்க்கிழமை அன்று, பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தியின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

தெலுங்கு மொழியில் ரங்கநாத ராமாயணத்தைக் கேட்ட பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தின் பண்டைய நிழல் பொம்மலாட்டக் கலை வடிவமான தொள பொம்மலாட்டத்தில் சித்தரிக்கப்பட்ட ஜடாயுவின் கதையைப் பார்த்தார்.

 

3.     அருள்மிகு குருவாயூர் கோயில், திருச்சூர், கேரளா

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும் பிரதமர் சென்று வழிபாடு நடத்தினார்.

 

4.   திரிபிரயார் ஸ்ரீ ராமசுவாமி கோயில், திருச்சூர், கேரளா

பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 17 அன்று கேரளாவின் திரிபிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமியின் தெய்வீக இரடத்திற்கு விஜயம் செய்தார். ஸ்ரீராமசுவாமி கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிட்டுக் கலைஞர்களைப் பாராட்டினார்.

5.  அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

2024 ஜனவரி 20 ஆம் தேதி, பிரதமர்  நரேந்திர மோடி தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி புனித ஆலயத்திற்கு வருகை தந்தார். புகழ்பெற்ற கம்பர் தமது தலைசிறந்த படைப்பை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய புனித இடமான ஸ்ரீரங்கத்தில், கம்ப ராமாயணத்தின் கவிதை பாடலையும் அவர் கேட்டார்.

6.    அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் பூஜை செய்த பின்னர், பிரதமர்  நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி புனித ஆலயத்தில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படும்  இறைவனுக்கு பக்தியுடன் மரியாதை செலுத்தி, வழிபாடு நடத்தினார். மாலையில் கோயில் வளாகத்தில் பஜனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

7.   தனுஷ்கோடி கோதண்டராமசுவாமி கோயில்

இன்று (21-01-2024) தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார். தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடம் என்று கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் சென்று வழிபட்டார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

நாளை கும்பாபிஷேகம்: வண்ண மலர்கள், விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி இராமர் கோவில்!

Next Post

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் கதையைச் சொல்கிறது அயோத்தி ராமர் கோவில்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies