இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் - காரணம் என்ன?
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

விராட் கோலி விலகுவதற்கான காரணங்கள் குறித்து பிசிசிஐ தனது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில்” விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். எனவே அவரது இந்த விலகல் குறித்து யாரும் பெரிய அளவில் ஆராய வேண்டாம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசிய பின்பே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நாட்டுக்காக விளையாடுவதே முதன்மையான விஷயம் என்றும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐ கோலி எடுத்துள்ள முடிவை மதிப்பதாகவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளது. செயல்திறன் மிக்க பிற வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

விராட் கோலியின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து அவரது தனிப்பட்ட காரணங்கள் என்ன என்று ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனவும் வரவிருக்கும் சவாலான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.

Tags: viratkohlitest cricket
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

Next Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies