இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! - குடியரசுத் தலைவர்
Sep 9, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை அடைவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இணையற்ற பங்களிப்பை செய்துள்ளது என்றார். இந்த நிறுவனம் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் திறமையாக மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, அத்தகைய ஆராய்ச்சிகள் களத்தில் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது எனறு கூறினார்.

இந்த நிறுவனம் 200-க்கும் அதிகமான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 2005க்கும் 2020-க்கும் இடையே, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 100-க்கும் அதிகமான பயிர் வகைகளை உருவாக்கியுள்ளது. அதன் பெயரில் 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் அது கொண்டுள்ளது என்று  கூறினார்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்று கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

எனவே, நமது பொருளாதாரத்தின் இந்த அடித்தளம் முடிந்தவரை வளர்வதையும், அதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும்.  விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், புதிய வேளாண் முறைகளை ஊக்குவிக்கவும், சுமூகமான பாசன முறையை ஏற்படுத்தவும் அரசு பணியாற்றி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வருமானப் பாதுகாப்பை வழங்குவதற்காக அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம் என்று கூறினார். நமது விவசாய சகோதர சகோதரிகளில் பலர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதையும், வறுமை வாழ்க்கையிலிருந்து வளமான வாழ்க்கையை நோக்கிச் செல்வதையும் உறுதி செய்வதில் நாம் அதிக வேகத்துடன் முன்னேற வேண்டும்.

2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும்போது, இந்திய விவசாயிகள் இந்தப் பயணத்தின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை

Next Post

குடியரசுத் துணைத் தலைவர் மகாராஷ்டிரா பயணம்!  

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies