GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! - அண்ணாமலை
Jul 22, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு வழங்க வேண்டிய  GST Refund தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு நிலுவையில் வைத்துள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

ஜிஎஸ்டி வரி கட்டும் அனைவருக்கும், மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை வழங்குவது வழக்கம். மத்திய அரசின் ரீபண்ட் தொகை குறித்த நேரத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

ஜிஎஸ்டி வரி கட்டும் அனைவருக்கும், மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை வழங்குவது வழக்கம். மத்திய அரசின் ரீபண்ட் தொகை குறித்த நேரத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு…

— K.Annamalai (@annamalai_k) February 9, 2024

குறிப்பாக, தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு அடுத்ததாக, பெரிய தொழிலாக விளங்கும் ஜவுளித் தொழிலில், விசைத்தறியாளர்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை கடந்த நான்கு மாதங்களாக வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது.

பொதுவாக, ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை மீண்டும் தொழில் முதலீடாகவே பயன்படுத்தப்படும் நிலையில், நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கு பகுதியில் உள்ள ஜவுளி மில்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவையில் இருக்கிறது என்பது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

தொழில் முதலீடு குறைவது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதைக் கூட இந்த திமுக அரசு உணராமல் இருக்கிறது.

ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவை என்பது, விசைத்தறியாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துத் தொழில்களையும் பாதிக்கும் பிரச்சினை ஆகும். உடனடியாக, தமிழக அரசு நிலுவையில் வைத்திருக்கும் அனைத்துத் தொழில் உற்பத்தியாளர்களுக்கும்,  ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை வழங்குமாறு தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiGSTtax
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 

Next Post

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! – குடியரசுத் தலைவர்

Related News

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies