இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்
Oct 28, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பலவீனமான 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து பலமான “முதல் 5” நிலைக்கு முன்னேறிய இந்தியாவின் கடந்த பத்தாண்டு கால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் என மத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஇணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் குழுமம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் மாற்றத்தின் சக்திகளை அளவிடுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி எந்தவொரு பொருளாதார மாணவரையும் உற்சாகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்து ஆண்டுகள்,  நம்பிக்கையை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். பல்வேறு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா விரைவான உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்புக் குறியீட்டில் 2014-ம் ஆண்டில் நாம் 81-வது இடத்தில் இருந்ததாகவும் தற்போது 41 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தில்  உள்ளதாகவும் அவர் கூறினார். உலக அளவில் 3-வது பெரிய புத்தொழில் சூழல்  அமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விண்வெளி சீர்திருத்தங்கள் மூலம் பெரிய விண்வெளித் திட்டங்கள் சாத்தியமானது என்று அவர் கூறினார். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்தது எனவும் தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி கொண்ட இந்தியாவில், மிகப்பெரிய கடலோர செல்வ வளத்தைப் பயன்படுத்த ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் சிற்பிகளாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Tags: IndiaDr Jitendra SinghIndia's journey in the past decadeeconomic growth
Share
Tweet
SendShare
Previous Post

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு!

Next Post

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies