தேசிய கீதம் இசைக்கப்படாததாலும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே சட்டப்பேரவையில் உரையை வாசித்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. வரும் 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழககம். இந்நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதால் சுமார் 2 நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார்.
முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி ஆளுநர் தன் உரையை தொடங்கினார்.2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என தெரிவித்தார்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
என்ற திருக்குறளை வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி என கூறி உரையை முடித்ததார்.