சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 29, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் யாத்திரை 200-வது தொகுதி நிறைவையொட்டி, சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டாதமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருகிறோம். மக்கள் மனதில் நமது நல்லாட்சியின் அருமை தெரிகிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம். தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக. இந்த புண்ணிய பூமியில் இதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இதில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் யாத்திரை, ஏன் வேள்வியும் கூட.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம், பிரதமர் நரேந்திர மோடி பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. ஆன்மிகம் வளர்ந்து விட்டால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தந்து விட்டால் இந்த பாரதம் முழுமை அடையும்.

தமிழகத்தில் பொய் பேசி ஆட்சி நடத்துகிறார்கள். சமீபத்தில் சென்னையில் வந்த வெள்ளமே அதற்கு சான்று. ரூ.4 ஆயிரம் கோடி, ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்தோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் மக்கள் துன்பப்பட்டதை மறக்க முடியுமா? இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பா.ஜனதா எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்.

சென்னை நகரம் பா.ஜனதா பக்கம் வரவேண்டும். சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். புதிய சென்னை உருவாக்க வேண்டும். இன்றைக்கு எனது யாத்திரையின் மூலம் 200-வது தொகுதிக்கு வந்திருக்கிறேன். 234-வது தொகுதியில் இந்த யாத்திரையை நிறைவு செய்யும்போது ஒரு புதிய சரித்திரம் பிறக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் வெற்றி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies