எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அணைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யான் வரவேற்றார்.பின்னர் அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.

அப்போது தங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. நான் உங்களைச் சந்திக்க இங்கு வரும்போதெல்லாம், எனது குடும்பத்தைச் சந்திக்க வருவதாகவே உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது மற்றும் நமது நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் எனது அழைப்பை ஏற்று சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு வந்ததற்கு நன்றி. இந்த நிகழ்வை நீங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளீர்கள் என பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யானுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்று நாம் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இது  மகிழ்ச்சியான விஷயம். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த முக்கியமான திசையில் முன்னேறி வருகின்றன என்பது ஜி 20 நாடுகளுக்கு  ஒரு பெரிய செய்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து அபுதாபியில் நடைபெறும் அஹ்லான் மோடி என்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அவர் கத்தார் நாட்டிற்கு செல்கிறார்.

Tags: UAE President Sheikh Mohammed Bin Zayed Al NahyanModiuaeAbu Dhabiindian pm modiUPI RuPay card
Share
Tweet
SendShare
Previous Post

ஜே.இ.இ. முதன்மை தேர்வு!- முதலிடம் பெற்ற முகுந்த் பிரதீஷிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தி.மு.க.வின் மனநிலை என்னவென்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies