குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவரின் விளக்கம் பெற வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் கவனமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது. தேர்தல் பத்திரத் தகவல்களை மார்ச் 12ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும்  “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்” என்று தெரிவக்கப்பட்டது.

இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் தீர்ப்பை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கவும் மறுபரிசீலனை செய்யவும் கோரலாம் என்றும் அதுவரை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட வல்லநர்கள் கூறுகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரொபதி முர்மு தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Supreme Court Lawyers Association President's letter to the President!
Share
Tweet
SendShare
Previous Post

ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

ஹனுமன் படக்குழுவை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies