சிஏஏ சட்டம் நடைமுறை! - இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஏஏ சட்டம் நடைமுறை! – இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தியதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டி, இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் என அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

CAA குறித்து செய்தியாளரிடம் பேசிய அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி,

“நான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள். 1990-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எனது பெற்றோருடன் குடிபெயர்ந்தேன்.

அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானில் இந்து பெண்கள் படும் வலிகள் மற்றும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. வெறும் பெண்கள் மட்டுமல்ல, பள்ளிக்கு செல்லும் இந்து மாணவர்களும் இதையே எதிர்கொள்கிறார்கள்.

நான் குஜராத்தில் தான் தங்கியிருக்கிறேன், அது பிரதமர் மோடியின் மாநிலம். 1990-ல் பெற்றோருடன் குடிபெயர்ந்தேன், 2016ல் குடியுரிமை பெற்றேன்.

எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களும் இந்தியர்களே. காங்கிரஸ் பதவியில் குடியுரிமை பெற 26 ஆண்டுகள் ஆனது. 2004 முதல் 2014 வரை மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.

2004 முதல் 2014 வரை, நான் மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், அவர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள், பின்னர் 26 ஆண்டுகளில் நான் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றாலும் எனது குடியுரிமையை மூன்று முறை நிராகரித்தார்கள்.

ஒரு வகையில், இந்தியாவுக்கு வந்த பிறகு நன்றாக நடத்தப்பட்டோம், 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 2016ல் குடியுரிமை பெற்றேன். பிரதமர் நரேந்திர மோடி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்ததால், மாவட்ட அளவில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: caa
Share
Tweet
SendShare
Previous Post

அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

மார்ச் 15-ல் தொடங்குகிறது ரஷ்ய அதிபர் தேர்தல்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies