மக்களவைத் தேர்தல்: 48,000 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல்: 48,000 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 48 ஆயிரம்  திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

17-வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.  எனவே, 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 97 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், சுமார் 48 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தலில் திருநங்கைகளின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 75 ஆக இருந்தது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (7,797), தமிழ்நாடு (5,793), கர்நாடகா (4,826) ஆகிய மாநிலங்களில் இருந்தது.  அருணாச்சல பிரதேசம், டாமன் மற்றும் டையூ, கோவா, லட்சத்தீவு, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருநங்கை வாக்காளர்கள் இல்லை.

திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதும் தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags: votingLok Sabha elections.Transgenders
Share
Tweet
SendShare
Previous Post

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

மக்களவைத் தேர்தல்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies