கோவையில் அண்ணாமலை - சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
Sep 13, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் அண்ணாமலை – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 06:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக கோவை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளராக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அண்ணாமலைக்கு சென்ற இடம் எல்லாம் ஆன்மீக அறிஞர்களும், பாஜகவினரும், கூட்டணிக்கட்சியினரும், பொது மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், வணக்கத்திற்குரிய பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன். தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில், திருநெறிகளை நடத்தி, வழிபாட்டு முறைகளோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பணிகள் மேற்கொண்டு வரும் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து உரையாடினோம் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை,

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக பாஜக சார்பாக, மாவட்ட நிர்வாகிகள், பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகமும் இம்முறை நிச்சயம் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டோம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டுமென்று, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் முனைப்புடன் பணியாற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் மக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றம், எட்டும் தூரத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, தன்னலமின்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நன்றிகளை மாலையாக கோர்த்து வெளிப்படுத்தினார்.

பின்னர், தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் திரு.P. இராமநாதன் அவர்கள்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சித் திறனாலும், ஆளுமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு.ஜெயசதீஷ் அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில், பொதுமக்களுக்காகப் பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் திரு.P.இராமநாதன் அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன் என்றார்.

இந்த நிலையில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று, கோவை தெற்கு மாவட்டத் தலைவர்  V.V.வாசன், வடக்கு மாவட்டத் தலைவர் திரு T. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னலமற்ற தலைவர் ஐயா G.K.மூப்பனார் அவர்கள் காட்டிய பாதையில், அண்ணன் திரு GK வாசன் அவர்கள் வழிநடத்துதலில் பயணிக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி சகோதரர்களின் கடுமையான உழைப்பு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க உறுதுணையாக இருக்கும். வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தின் பங்கும் நிச்சயம் எதிரொலிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரியில் போலீஸ் தடியடி – வானதி சீனிவாசன் கண்டனம்!

Next Post

ஹோலி பண்டிகை! – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies