டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழு மூலம் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தெலுங்கானா எம்எல்சி கவிதா மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் உள்ள நிலையில், கவிதா நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களில் ஒருவரான தீபக் சிங்லாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் என்சிஆர் பகுதிகளிலும் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி டெல்லி மத்தியாலாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.