ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கதுறை சோதனை!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கதுறை சோதனை!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை  சோதனை நடத்தி வருகின்றனர்.

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தது, சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான ஆவணங்களையும் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும், இருவரும் காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இயக்குநர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பி, கடந்த 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, தி.நகரில் உள்ள  இயக்குநர் அமீரின் அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களின் வீடு, அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.  சோதனை நடைபெறும் இடங்களில், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: director AmirED RAIDZafar Sadiqdrug trafficking caseCentral Narcotics Control Unit
Share
Tweet
SendShare
Previous Post

யுகாதி பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies