மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக, காங்கிரஸ் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடிகரை, வெள்ளமடை, கஸ்தூரிபாளையம், வீரபாண்டி பிரிவு பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2004 – 2014 ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இதே இந்தி கூட்டணி கட்சிகள், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்து, முப்பது கட்சிகள் சேர்ந்து திரு. மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராக அறிவித்தன. நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரான அவரால், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது மீண்டும் அதே போன்ற ஊழல் ஆட்சியைக் கொண்டு வர கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கான ஆட்சியாக அமைந்தது.

கடந்த 2019 தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, மூன்றாவது முறையாக, வளர்ச்சியை வேகப்படுத்த, உலக அரங்கில் அடுத்த 25 ஆண்டுகளில் முதல் நாடாக நமது நாடு உருவாக அடித்தளம் அமைக்கும் ஆட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது கோவையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி விட்டது. பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல்,கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குடி தண்ணீர், பாசனத்துக்குத் தண்ணீர் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கிறது.

இதனைச் சரி செய்ய, நமக்கு, நமது பிரதமரின் திட்டங்களை முழுமையாக, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. நாம், நமது இளைஞர்கள், விளையாட்டில் சாதிக்க, ஒவ்வொரு பஞ்சாயத்து தலைக்கிராமத்திலும், விளையாட்டு மைதானம் கொண்டு வரப் போகிறோம்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், 4,000 கோடி செலவில், கிரிக்கெட் மைதானம் கொண்டு வரப்போகிறாராம். நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டுமா அல்லது, வெளிநாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டுமா? 4,000 கோடியில், நமது கோவைக்கு நல்ல சாலைகள் அமைக்கலாம். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். ஆனால், திமுகவுக்கு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை.

கோவையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடிப் பார்வையில் தீர்வு கிடைத்திட, கோவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திட, நமது இளைஞர்கள், தாய்மார்கள் முன்னேற்றம் பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வெற்றியின் சின்னம், மாற்றத்தின் சின்னம், வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கோவையின் முன்னேற்றத்துக்காக, கட்சி வேறுபாடின்றி வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
Share
Tweet
SendShare
Previous Post

ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கதுறை சோதனை!

Next Post

கோடை விடுமுறை: சென்னை – நாகை இடையே வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies