சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? - ராஜ்நாத் சிங் கேள்வி
Jul 29, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இது எங்கள் வீடு, சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு ‘மறுபெயரிட்டு’ சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாரிடம் சொல்ல விரும்புகிறேன். நாளை சீனாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால், அவற்றை எங்களுடையதாக ஆகுமா? சீனா இந்த தவறை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.  இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறது. எங்கள் சுயமரியாதையை புண்படுத்தினால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான நிலங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை சுட்டிக்காட்டியவர், வடகிழக்கில் பிரதமர் மோடியின் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும் என்றார்.

இந்தியாவின் நிலத்தை இப்போது யாரும் எடுக்க முடியாது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து எல்லைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் கடைசி கிராமங்கள் என்று அழைத்தது, ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று சொல்கிறோம். நாங்கள் கிராமங்களை வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறோம், எல்லையோர கிராமங்கள் மேம்பட்டால் மட்டுமே, எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

Tags: chennai rajnath singh
ShareTweetSendShare
Previous Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் மோடி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies