சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்நது விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பார்க் சென்ற  பிரதமர், வாகன பேரணியில் பங்கேற்றார்.

6.30 மணிக்கு பனகல் பார்க்கில் தொடங்கிய பேரணி இரவு 7.15 மணி அளவில் தேனாம்பேட்டை சிக்னலில் நிறைவடைந்தது.

கையில் தாமரை சின்னத்தை ஏந்தியபடி சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், கைகள் அசைத்தும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.பிரதமருடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் சென்றார்.

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை பால் கனகராஜ், மத்திய சென்னை வினோஜ் பி.செல்வம், உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் மோடி, அங்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதனைத்தொடர்ந்து அரக்கோணத்தில்  இருந்து பிரதமர் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்லும் பிரதமர், அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

Tags: PM ModiChennaitamilnadumodi road show in chennai
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி

Next Post

மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல்? -அண்ணாமலை கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies