ஐபிஎல் கிரிக்கெட் : இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி !
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி !

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 26-வது போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடியது.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தது. லக்னோ அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது களமிறங்கிய ஆயுஷ் பதோனி, அர்சத் கான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இதில் ஆயுஷ் பதோனி 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என  35 பந்துகளில் 55 ரன்களை எடுத்தது.

அதேபோல் அர்சத் கான் 20 ரன்கள் எடுத்தார். முன்னதாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 22 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக குலதீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். கலீல் அகமது 2 விக்கெட்களும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான பிரித்வி ஷா 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் தனது அதிரடியான ஆட்டத்தில் 2  பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்களுடன் 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என 24 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார்.

இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18வது ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 3 விக்கெட்களை வீழ்த்திய குலதீப் யதாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags: iplDelhi capitalsLucknow Super GaintsDC won
Share
Tweet
SendShare
Previous Post

ஜாலியன் வாலாபாக்கில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Next Post

திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies