மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், பிஷ்ணுப்பூரில், ஓட்டுச்சாவடியை மர்ம நபர்கள் கைப்பற்ற முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதேபோல் தமன்போக்பியில் உள்ள ஓட்டுச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
மேலும், கொங்மேன் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்ட்டது. இதேபோல் கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.