பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் பாதை மாறிவிட்டது என்றும், காங்கிரஸ் அரசின் நிர்வாக திறன் இன்மை காரணமாகவே, நாட்டில் தீவிரவாதம், நச்சல்கள் ஆதிக்கம் தலைவிரித்து ஆடியது எனவும், ஊழலும் உச்ச கட்டத்தில் இருந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.