அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அசாமில் கடந்த மாதம் பெய்த இடைவிடாத மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். சற்று ஓய்ந்த மழை, தலைநகர் கவுஹாத்தியில் மீண்டும் கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக ருக்மினிகான் பகுதியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.