நில மோசடி வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் நிலத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வேலை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீது கூடுதல் குற்றப் பத்திரிகையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.
அதில் 11 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குற்றப் பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.