தமிழகத்தில் இன்றும் நாளையும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்துவரும் நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல நாளை டெல்டா மாவட்டங்களான கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.