ஈரானில் பொது இடத்தில் தலைமுடி தெரிந்ததற்காக பெண் ஒருவர் மீது அந்நாட்டு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதான அப்பெண் தனது வாகனத்தில் செல்லும்போது, தலைமுடி தெரிந்ததற்காக போலீஸார் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரானில் பெண்கள் மீது போர் நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.