சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில், பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
அதன்படி முதல் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், சிங்கபூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு-இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவ உள்ளதாக அறிவித்தள்ளதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.