மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதியாரின் சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.