கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பழக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முகமது என்பவருக்கு சொந்தமான இந்த கடையை அவர் வழக்கம்போல் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் மர்மநபர் ஒருவர் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடியது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.