திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குடும்பத்துடன் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் பேசிய நடிகர் சுரேஷ் கோபி, 12 ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையான வழிபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.
மேலும், தேசிய அளவில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும், பெரும் மழையால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.