வெளிநாட்டு பயணத்தின்போது பாரத தேசம் குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளுடன் இணைந்து நாட்டுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதையே ராகுல் காந்தி வாடிக்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் செயல்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதமாகவும், உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் கருத்துகள் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இடஒதுக்கீடு எதிர்ப்பினையும் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக இருக்கும்வரை இட ஒதுக்கீட்டை யாராலும் தடை செய்ய முடியாது என உறுதிபட தெரிவித்துள்ள அமித் ஷா காங்கிரஸ் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.