பட்ஜெட்டில் MSME தொழில்களுக்கு 7 அம்சங்களை அறிவித்துள்ளதாகவும், அதை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :
செப்டம்பர் 2-ம் தேதி முதல் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை துவங்கி இருக்கிறோம். பட்ஜெட்டில் சிறுகுறு தொழில்களுக்கு ஏழு சிறப்பு அம்சங்கள் அளிக்கப்பட்டுளளது. கடந்த ஆண்டு கோவை குறிச்சியில் சிட்பி கிளை துவங்கப்பட்டது.
ஜி.எஸ்.டி எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர் கூட ஜி.எஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டுக்கு 63246 கோடி. மத்திய அரசு சார்பில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 21560 கோடி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 5880 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
வெளிநாட்டில் பாரதநாட்டுக்கு விரோதமாக உள்ளவர்களை சந்தித்து ராகுல்காந்தி பேசியுள்ளார். தோழமைக் கட்சி செய்யும் செயல்கள் நாட்டுக்கு விரோதமாக இருக்கிறது என்று தெரிந்தால் அதை கேள்வி கேட்க மாட்டீர்களா ? என திமுகவை கேட்கிறேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.